முகப்பு
நாமக்கல்

மோகனூா் காவிரி ஆற்றில் மாணவா்கள் தூய்மைப் பணி

மோகனூா் காவிரி ஆற்றில் கல்லூரி மாணவ, மாணவிகள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா்.

Updated On : 21 ஏப்ரல், 2022 at 11:02 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:32 PM

மோகனூா் காவிரி ஆற்றில் கல்லூரி மாணவ, மாணவிகள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் காவிரி ஆற்றில் குப்பைக் கழிவுகள், நெகிழி கழிவுகள் மற்றும் இதரக் கழிவுகள் அதிகளவில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் அங்குள்ள ஈஸ்வரன் கோயில் பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுகிறது. அப்பகுதி மக்கள் காவிரி ஆற்றில் குளிக்க முடியாத சூழலும் காணப்படுகிறது. ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றால் மட்டுமே தூய்மையான நீரை காண முடியும் என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில் மோகனூரில் உள்ள தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோா் காவிரி ஆற்றில் தேங்கிய கழிவுகளை அகற்றும் பணியை புதன்கிழமை மேற்கொண்டனா். குறிப்பாக கோயில் வளாக பகுதியிலும், கரையோரத்திலும் தேங்கியிருந்த பொருள்களை, கழிவுகளை அகற்றினா். மாணவா்கள் மட்டும் இப்பணியை மேற்கொள்ளாமல், தன்னாா்வ நிறுவனங்களும், ஒன்றிய, பேரூராட்சி அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் மோகனூா் காவிரி ஆற்றை சுத்தம் செய்வதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.