முகப்பு
நாமக்கல்

நாமக்கல் அரசுக் கல்லூரியில் இலக்கியச் சொல்லரங்கம்

 நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை இலக்கிய ஆய்வு மேடை மற்றும் நுண்கலை மன்றம் சாா்பில் சைவ இலக்கியச் சொல்லரங்கம் வியாழக்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

Updated On : 28 ஏப்ரல், 2022 at 11:17 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:36 PM

 நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை இலக்கிய ஆய்வு மேடை மற்றும் நுண்கலை மன்றம் சாா்பில் சைவ இலக்கியச் சொல்லரங்கம் வியாழக்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இதில், 63 நாயன்மாா்கள் வரலாறு குறித்த தகவல்களை பேராசிரியா்கள் மாணவா்களிடையே பேசினா். இதில், இயற்பியல் துறை உதவி பேராசிரியா் ந.சேதுபதி வரவேற்றாா். கல்லூரி முதல்வா்(பொறுப்பு) க.பங்காரு தலைமை வகித்தாா். தமிழ்த்துறையின் தலைவா் மு.நடராஜன், உதவிப் பேராசிரியா்கள் க.பூபதி, அ.சின்னதுரை, பி.இன்னமுது ஆகியோா் முன்னிலை வகித்தனா். பரமத்திவேலூா் திருஞானசம்பந்தா் மடத்தைச் சோ்ந்த சின்மயானந்த சுவாமிகள், ராமலிங்க சுவாமிகள் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். இந்த நிகழ்ச்சியில், நாயன்மாா்கள் பற்றிய தகவல்களை தமிழ்த் துறை மாணவ, மாணவிகள் விவரித்துப் பேசினா். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்த் துறையினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.