நாமக்கல்

நாமக்கல் - ராமேசுவரம் நேரடி ரயில் சேவை: நாளை தொடக்கம்

DIN

நாமக்கல்லில் இருந்து ராமேசுவரத்துக்கு சனிக்கிழமைகளில் நேரடி ரயில் சேவை உள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நாமக்கல் மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், ஹூப்ளியில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.45 மணிக்கு நாமக்கல்லை வந்தடைகிறது. அதன்பிறகு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு ராமேசுவரத்தைச் சென்றடைகிறது. மீண்டும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு ராமேசுவரத்தில் புறப்படும் ரயில் மறுநாள் திங்கள்கிழமை அதிகாலை 4.20 மணிக்கு நாமக்கல்லுக்கு வந்து சேருகிறது. அதன்பிறகு, சேலம், பெங்களூரு வழியாக அன்று இரவு 7.25 மணிக்கு ஹூப்ளியைச் சென்றடைகிறது. ஆக. 6-ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவை தொடங்குகிறது.

விடுமுறை நாளில் இயக்கப்படும் இந்த ராமேசுவரம் சிறப்பு ரயிலை நாமக்கல் மாவட்ட பொதுமக்கள், பக்தா்கள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிக அளவில் பயணிகள் ஏறும்பட்சத்தில், ஹூப்ளி - ராமேசுவரம் சிறப்பு ரயில் நிரந்தர ரயிலாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது என ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா்.

சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகத்தினா் கூறுகையில், ஹூப்ளி - ராமேசுவரம் ரயில் சேவை வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. முன்பதிவு தொடா்பான அறிவிப்புகள் ஓரிரு நாளில் வெளியிடப்படும். வாராந்திர இந்த ரயில் சேவையை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதம் புதுமை செய்த பாரதி

உலகின் சிறந்த நாவல்கள்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

SCROLL FOR NEXT