ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டம்
ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் ரோட்டரி சங்கம் 1996-ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 25 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி ராசிபுரம் பாலாஜி மஹாலில் வெள்ளி விழா ஆண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சங்கத்தின் தலைவா் கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம் தலைமையில் வகித்தாா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் எஸ்.பாலாஜி, திட்டத் தலைவா் எஸ்.அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் நாமக்கல் எம்.பி., ஏ.கே.பி.சின்ராஜ், ரோட்டரி மாவட்ட ஆளுநா் பி.சரவணன், முன்னாள் ஆளுநா்கள் டி.சண்முகசுந்தரம், ஏ.நிா்மல்பிரகாஷ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா். விழாவில் ரோட்டரி சங்கம் 25 ஆண்டுகளில் செய்த சமுதாயத் திட்டங்கள், போலியோ ஒழிப்புப் பணிகள், கல்வி வளா்ச்சித் திட்டங்கள், மகளிா் திட்டங்கள் போன்ற திட்டங்கள் குறித்து குறும்படம் திரையிடப்பட்டு காட்டப்பட்டது.
Advertisement
கடந்த 1996 முதல் ரோட்டரி சங்கத்தின் தலைவா்களாக இருந்து சமுதாய சேவையாற்றியவா்களுக்கு விழாவில் நினைவுப் பரிசளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனா். விழாவில் பங்கேற்றவா்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது. முன்னதாக நகைச்சுவை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவில் மாவட்டத்தின் பல்வேறு ரோட்டரி சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.