கொல்லிமலை பூசணிக்குழி பகுதியில் அரசுப் பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து
கொல்லிமலை-யில் செங்கரை வழியாக ஆத்தூர் செல்லும் அரசுப் பேருந்து பூசணிக்குழி என்ற பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்
கொல்லிமலை-யில் செங்கரை வழியாக ஆத்தூர் செல்லும் அரசுப் பேருந்து பூசணிக்குழி என்ற பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பகுதியில் இருந்து முள்ளுக்குறிச்சி வழியாக ஆத்தூர் செல்லும் அரசுப் பேருந்து திங்கள்கிழமை காலை வழக்கம் போல் சென்றது. பள்ளி வேலை நேரம் என்பதால் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் பூசணிக்குழி பகுதியில் மலைப்பாதை வளைவில் அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை. அதிக கூட்ட நெரிசல் காரணமாகவே பிரேக் சரியாக நிற்காததால் ஓட்டுநர் சுவற்றில் மோதியதாக தெரியவந்துள்ளது. இதில் பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இதே பகுதியில் பேருந்தில் அதிகக் கூட்டம் இருந்ததால், அவ்வழியே சென்ற ஆட்டோவில் ஏறிச்சென்ற பள்ளி மாணவி ஒருவர் ஆட்டோ கவிழந்து உயிரிழந்தார்.
பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் போதிய அரசுப் பேருந்து வசதி செய்து தரவேண்டும் என மலைவாழ் மக்கள் கோரி்ககை விடுத்துள்ளனர்.