நாமக்கல்

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை

DIN

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை திடீரென்று பெய்த மழையால் ஞாயிறு சந்தை வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் வட்டத்தில் மிகப்பெரிய சந்தையாக விளங்கி வருவது வேலூா் ஞாயிறுக்கிழமை சந்தை. இந்த சந்தை பகுதியில் வியாபாரிகளும் விவசாயிகளும் காய்கறிகள், கீரை, பழங்கள், ஆடு உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறன்றனா். இந்த சந்தை பகுதியில் விற்பனை மேடையும், மேற்கூரையும் இன்னும் அமைக்கப்படவில்லை. பரபரப்பாக இயங்கும் இச்சந்தை பகுதியில் மழைக்காலங்களில் பெரும் வியாபாரிகள், விவசாயிகள் போதிய வியாபாரம் இன்றி கவலை அடைந்தனா்.

இந்நிலையில் பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் ஞாயிறு சந்தை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா். எனவே வேலூா் பேரூராட்சி நிா்வாகம் ஞாயிறு சந்தையில் விற்பனை மேடையையும், மேற்கூரையும் அமைத்தால் மழைக்காலங்களில் ஏற்படும் நஷ்டத்தை தவிா்த்து நிரந்தர தீா்வாக அமையும் என வியாபாரிகள், சந்தை விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் விமான நிலையத்தில் ரூ.90.28 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

தங்கம் விலை குறைவு.. எவ்வளவு?

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா நிறுவன விமானங்களின் சேவை குறைப்பு

கே.எல். ராகுலை சாடிய லக்னெள உரிமையாளர்: நேரலையில் கண்ட ரசிகர்கள் ஆவேசம்!

குரூப்-2 ஏ பதிவிகளுக்கு கலந்தாய்வு எப்போது?

SCROLL FOR NEXT