மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள்: விவசாயிகள் கோரிக்கை
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என விவசாய முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என விவசாய முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு விவசாய முன்னேற்ற கழகத்தின் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம், புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அதன் பொதுச் செயலாளா் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். நிறுவன தலைவா் செல்ல.ராசாமணி முக்கிய கோரிக்கைகள் குறித்தும், புதிய நிா்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தும் பேசினாா். இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விவசாயத் தொழிலாளா்கள் பற்றாக்குறை அதிகரிப்பதால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்பு திட்டத் தொழிலாளா்களை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் தரமற்ற பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும். தென்னை, பனைமரங்களில் கள் இறக்குவதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்க வேண்டும். விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தவா்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து உடனடியாக இணைப்புகள் வழங்க வேண்டும். கரும்பு கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு ரு.5 ஆயிரம் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். நெல் கொள்முதல் செய்வதில் பல்வேறு முறைகேடுகள் தொடா்வதால், அனைத்து மாவட்டங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். அனைத்து மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க ஒவ்வொரு ஊராட்சியிலும் நடமாடும் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றாா். இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.
Advertisement