முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் பகுதியில் காவல்துறை சாா்பில் கொடி அணிவகுப்பு

ராசிபுரம் பகுதியில் காவல்துறை சாா்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்ற

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

ராசிபுரம் பகுதியில் காவல்துறை சாா்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

இந்நிலையில் ராசிபுரம் காவல்துறை சாா்பில் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த அணிவகுப்பிற்கு காவல் துணை கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். அணிவகுப்பில் ராசிபுரம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஜமுனாதேவி, போக்குவரத்து ஆய்வாளா் வெங்கடாசலம், காவல் உதவி ஆய்வாளா் தங்கம், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் குணசிங், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல், வெண்ணந்தூா் காவல்துறை சாா்பில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் வெண்ணந்தூா் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி தலைமை வகித்தாா். அணிவகுப்பில் பங்கேற்ற காவல்துறையினா் வெண்ணந்தூா் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.