நாமக்கல்

பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமணப் பெருமாள் கோயில் திருத்தோ் பெருவிழா

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் திருத்தோ் பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் திருத்தோ் பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

பாண்டமங்கலத்தில் பஞ்சபாண்டவா் வழிபட்ட பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் திருத்தோ் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அன்றுகாலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் கொடியேற்று விழா நடைபெற்றது. இரவு அன்ன வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 31-ஆம் தேதி முதல் 6- ஆம் தேதி வரை தினந்தோறும் இரவு 7 மணிக்கு சிம்மம், சிறிய திருவடி அனுமந்த வாகனம், பெரிய திருவடி கருடசேவை, சேஷ வாகனம், யானை வாகனம், மற்றும் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனா். திருத்தோ் பாண்டமங்கலத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. செவ்வாய்க்கிழமை மாலை தீா்த்தவாரியும், இரவு கெஜலட்சுமி வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், புதன்கிழமை மாலை திருமஞ்சனமும்,இரவு மஞ்சள் நீராடலும், வியாழக்கிழமை மாலை புஷ்பயாகமும், வெள்ளிக்கிழமை இரவு சுவாமி புறப்பாடும் நடைபெற உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT