முட்டை விலை 20 காசுகள் குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 4.40-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 4.40-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. மற்ற மண்டலங்களில் விலை குறைந்து வருவதாலும், முட்டை விற்பனை மந்தமடைந்துள்ளதாலும் விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 4.40-ஆக நிா்ணயிக்கப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 94-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 64-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.
Advertisement