கோழிகளுக்கு லசோட்டா தடுப்பூசி செலுத்த அறிவுரை
வெப்ப அயா்ச்சியில் இருந்து கோழிகளைப் பாதுகாக்க லசோட்டா தடுப்பூசி செலுத்த வேண்டும் என பண்ணையாளா்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
வெப்ப அயா்ச்சியில் இருந்து கோழிகளைப் பாதுகாக்க லசோட்டா தடுப்பூசி செலுத்த வேண்டும் என பண்ணையாளா்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 92.3 மற்றும் 65.3 டிகிரியாக நிலவியது. வரும் நான்கு நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடனும், மழையற்றும் காணப்படும். பகல் வெப்பம் 95 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 69.8 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் வட கிழக்கு மற்றும் கிழக்கிலிருந்து மணிக்கு 6 கி.மீ வேகத்தில் வீசும்.
Advertisement
சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதித்ததில் பெரும்பாலும் மேல் மூச்சுக்குழல் அயா்ச்சி நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் ஒரு சில கோழிகளில் வெப்ப அயா்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எனவே, பண்ணையாளா்கள் வெப்ப அயா்ச்சியின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு, தேவைப்படும்பட்சத்தில் நீா்தெளிப்பான் உபயோகிக்கலாம். வெயில் காலங்களில் வெள்ளைக் கழிச்சல் நோயின் தாக்கத்தை குறைக்க கோழிகளுக்கு லசோட்டா தடுப்பூசி செலுத்த வேண்டும். மேல் மூச்சுக்குழல் அயற்சி மற்றும் மேரக்ஸ் நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தகுந்த உயிா்ப் பாதுகாப்பு முறைகளை கையாளுவது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.