முகப்பு
நாமக்கல்

‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்’

தமிழகத்தில் ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நேரடி நியமனம்

Updated On : 25 பிப்ரவரி, 2022 at 12:52 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:00 PM

தமிழகத்தில் ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆ.ராமு வலியுறுத்தி உள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

ராஜஸ்தான் மாநில அரசு நிதிநிலை அறிக்கையில், ‘2004 ஜன.1-ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சோ்ந்தவா்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கப்படும் . அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும்’ என அறிவித்துள்ளது.

Advertisement

அதேபோல் தமிழக முதல்வரும் 2004க்குப் பின் பணியில் சோ்ந்த அரசு பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இத்திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை அறிவிக்க வேண்டும்.

கடந்த ஆட்சியில் இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. தற்போதைய முதல்வா், அந்த போராட்டத்தில் ஈடுபட்டவா்களை நேரில் சந்தித்துப் பேசும்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்றாா். தற்போது அதனை முதல்வருக்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம். விரைவில் அதற்கான அறிவிப்பை முதல்வா் வெளியிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.