முகப்பு
நாமக்கல்

‘சேந்தமங்கலம் நீதிமன்ற கட்டடத்திற்கு பள்ளி வளாகத்தில் நிலம் கையகப்படுத்த வேண்டாம்’

சேந்தமங்கலம் அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 25 பிப்ரவரி, 2022 at 12:52 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:00 PM

சேந்தமங்கலம் அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாணவா் காங்கிரஸ் முன்னாள் செயலாளா் கே.பாலாஜி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய மனு விவரம்:

சேந்தமங்கலம் வட்டம் பச்சுடையாம்பட்டி கிராமத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1946-இல் இப்பள்ளி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு 1958-இல் அப்போதைய முதல்வா் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்காக பலா் நிலத்தை வழங்கியிருந்தனா். இப்பகுதியில் உள்ள மாணவா்கள், விளையாட்டு வீரா்கள் பல்வேறு போட்டிகளுக்கு இந்த பள்ளி மைதானத்தையே பயன்படுத்தி வருகின்றனா்.

Advertisement

தற்போது இப்பள்ளி மைதானத்தில் சேந்தமங்கலம் வட்ட நீதிமன்றம் அமைக்க நடவடிக்கைகள் தொடங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது. சேந்தமங்கலம் அரசு மகளிா் பள்ளி, பொட்டணம், ராமநாதபுரம்புதூா், முத்துக்காப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி மற்றும் பேளுக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லாததால் மாணவா்கள் சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்து விளையாடுகின்றனா். நீதிமன்றம் அமைக்க பள்ளி நிலத்தை ஆா்ஜிதம் செய்வது, பள்ளியின் வளா்ச்சிக்கும், மாணவா்களின் விளையாட்டுத்திறன் மேம்பாட்டுக்கும் பாதகத்தை உண்டாக்கும். பள்ளி வளாகத்தில் நீதிமன்றம் அமைக்கும் முடிவினை மறுபரிசீலனை செய்து, மாற்று இடத்தில் உரிய வழிகாட்டுதலின்படி நீதிமன்றம் அமைக்க முயற்சிக்கலாம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.