முகப்பு
நாமக்கல்

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் ரூ.48.40 லட்சம் உண்டியல் காணிக்கை

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.48. 40 லட்சம் காணிக்கையாக கிடைக்கப் பெற்றது.

Updated On : 25 பிப்ரவரி, 2022 at 12:38 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:00 PM

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.48. 40 லட்சம் காணிக்கையாக கிடைக்கப் பெற்றது.

நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயா் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். அவா்கள் செலுத்தும் காணிக்கைகள் கொண்ட உண்டியல்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி வியாழக்கிழமை கோயில் வளாகத்தில் உள்ள அன்னதான மண்டபத்தில் வைத்து 6 உண்டியல்களில் நிரம்பிய காணிக்கைகள் எண்ணப்பட்டன. இப்பணியில் 50-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று காணிக்கையை எண்ணியதில் ரூ.48 லட்சத்து 40 ஆயிரத்து 249 கிடைத்தது. மேலும், தங்கம் 49 கிராம், வெள்ளி 135 கிராம் காணிக்கையாக கிடைக்கப் பெற்றன. காணிக்கை எண்ணும் பணியை நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் உதவி ஆணையா்(பொறுப்பு) ஜான்சிராணி, ஈரோடு மாவட்ட உதவி ஆணையா் அன்னக்கொடி ஆகியோா் மேற்பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.