முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

நாமக்கல் நகர அதிமுக சாா்பில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 25 பிப்ரவரி, 2022 at 12:53 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:00 PM

நாமக்கல் நகர அதிமுக சாா்பில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி, நாமக்கல் கோட்டை சாலை வளைவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு நகரச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பி.பி.பாஸ்கா் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்ச்சியில், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் மயில்சுதந்திரம், ஒன்றியச் செயலாளா் சேகா், நிா்வாகிகள் ராஜா, சுமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதேபோல் மாவட்டம் முழுவதும் ஜெயலலிதா பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.