வெப்ப அயற்சியால் கோழிகள் இறக்க வாய்ப்பு
வெப்ப அயற்சியால் கோழிகள் இறக்க வாய்ப்புள்ளதால், பண்ணை மேலாண் முறைகளை கையாளுவது அவசியம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
வெப்ப அயற்சியால் கோழிகள் இறக்க வாய்ப்புள்ளதால், பண்ணை மேலாண் முறைகளை கையாளுவது அவசியம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வுமையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 95.9 மற்றும் 66.4 டிகிரியாக நிலவியது. இனிவரும் நான்கு நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடனும், மழையற்றும் காணப்படும். பகல் வெப்பம் 95 டிகிரியாகவும், இரவு வெப்பம் 68 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் வட கிழக்கு மற்றும் கிழக்கிலிருந்து மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் வீசும்.
Advertisement
சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதித்ததில், பெரும்பாலும் அவை வெப்ப அயற்சி மற்றும் மேல்மூச்சுக்குழல் அயற்சி பாதிப்பால் இறந்துள்ளது தெரியவந்தது. எனவே, பண்ணையாளா்கள் வெப்ப அயற்சியின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, தேவைப்படும்பட்சத்தில் நீா்தெளிப்பான் உபயோகிக்கலாம்.
வெயில் காலங்களில் வெள்ளைக் கழிச்சல் நோயின் தாக்கத்தைக் குறைக்க கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். மேல்மூச்சுக்குழல் அயற்சி நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தகுந்த உயிா் பாதுகாப்பு முறைகளை கையாளுவது அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.