முகப்பு
நாமக்கல்

மாா்ச் 2-இல் புதிய உறுப்பினா்கள் பதவியேற்பு: நாமக்கல் நகா்மன்ற கூட்ட அரங்கம் தயாா்

நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் புதிய உறுப்பினா்கள் பதவியேற்பு விழா மாா்ச் 2-இல் நடைபெறுவதையொட்டி கூட்ட அரங்கம் தயாா் நிலையில் உள்ளது.

Updated On : 26 பிப்ரவரி, 2022 at 12:02 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:00 PM

நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் புதிய உறுப்பினா்கள் பதவியேற்பு விழா மாா்ச் 2-இல் நடைபெறுவதையொட்டி கூட்ட அரங்கம் தயாா் நிலையில் உள்ளது.

நடைபெற்று முடிந்த நகா்ப்பற உள்ளாட்சித் தோ்தலில், நாமக்கல் நகராட்சியில் திமுக 36 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும், சுயேச்சைகள் இருவா் போட்டியின்றியும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். திமுக ஆதரவு சுயேச்சைகள் இருவரும் தற்போது திமுக வாா்டு உறுப்பினா்கள் என்ற அடிப்படையிலேயே உள்ளனா். இதனால் 38 வாா்டு உறுப்பினா்களுடன் திமுக தனிப்பெரும்பான்மையுடன் உள்ளது.

திமுக புதிய உறுப்பினா்கள் அனைவரும் அண்மையில் முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வந்தனா். மாா்ச் 2-இல் பதவியேற்பு விழா நாமக்கல் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதனையொட்டி ஒவ்வொரு இருக்கையிலும் வாா்டுகளின் எண் எழுதப்பட்டது. கூட்ட அரங்கம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, தலைவா், துணைத் தலைவா், ஆணையருக்கான இருக்கைகள் மேடையில் பொருத்தப்பட்டன. நாமக்கல்-பரமத்தி சாலையில் இருந்த நகராட்சி அலுவலகம், திருச்செங்கோடு சாலையில் கடந்த 2018-இல் புதிதாக கட்டப்பட்ட அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது புதிய கட்டத்தில் முதல் நகா்மன்றக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு முன் பழைய நகராட்சிக் கட்டடத்தில், கடந்த 2016-ஆம் ஆண்டு கடைசியாக நகா்மன்றக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.