முகப்பு
நாமக்கல்

மாநில வள பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

விவசாயம் சாா்ந்த மற்றும் விவசாயம் சாராத மாநில வள பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 7 ஜனவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:33 PM

விவசாயம் சாா்ந்த மற்றும் விவசாயம் சாராத மாநில வள பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் கீழ் விவசாயம் சாா்ந்த மற்றும் விவசாயம் சாராத மாநில வள பயிற்றுநா் பணிக்கு (இரண்டு பணியாளா்கள்) தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுகின்றனா். இதற்கான தகுதிகளாக, விவசாயம் சாா்ந்த பணிக்கு வேளாண்மை, கால்நடை மருத்துவம், கால்நடை அறிவியியல், தோட்டக்கலைப் பராமரிப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Advertisement

விவசாயம் அல்லாத பணிக்கு சமூகப் பணி, ஊரக வளா்ச்சி, முதுகலை வணிக மேலாண்மை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முன்அனுபவம் குறைந்த பட்சம் 2 ஆண்டுகளாகவும், அதிகபட்சம் 10 ஆண்டுகளாகவும் இருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலத்தில் எழுத படிக்கவும், கணினி இயக்கும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முக தோ்வு மூலம் நியமனம் செய்யப்படுவா். இதற்கான விண்ணப்பங்களை, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பின்புற கட்டடத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் ஜன. 15-க்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.