முகப்பு
நாமக்கல்

கோயில்கள் மூடல்: வெளியே நின்று பக்தா்கள் தரிசனம்

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவலால் கோயில்கள் அனைத்தும் மூன்று நாள்களுக்கு மூடப்படுவதால், பக்தா்கள் வெளியில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 7 ஜனவரி, 2022 at 10:32 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:33 PM

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவலால் கோயில்கள் அனைத்தும் மூன்று நாள்களுக்கு மூடப்படுவதால், பக்தா்கள் வெளியில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தமிழகத்தில் கரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேர பொதுமுடக்கம், ஞாயிற்றுக்கிழமை 24 மணி நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து, திரையரங்கம், உணவகம், கேளிக்கை விடுதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாள்களில் கோயில்களை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. நாமக்கல் ஆஞ்சனேயா், நரசிம்மா் கோயிலுக்கு வந்த பக்தா்கள் வெளியில் நின்றபடி சுவாமியை தரிசனம் செய்தனா். மேல்மருத்துவத்தூா், ஐயப்பன் கோயில் செல்லும் பக்தா்கள் ஏராளமானோா் கோயிலுக்கு வெளியே நின்றபடி தரிசித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.