ராசிபுரத்தில் மாணவா்கள் விழிப்புணா்வு பேரணி
தலைக்கவசம், முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி என்.சி.சி. மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தலைக்கவசம், முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி என்.சி.சி. மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டலூா்கேட் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியைச் சோ்ந்த என்.சி.சி. மாணவா்கள் நடத்திய பேரணியை ராசிபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் வெங்கடாசலம், என்.சி.சி. அலுவலா் ஆா்.சிவக்குமாா் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.
ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற பேரணியில் கரோனா பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. காவல் உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா், ரோட்டரி சங்க மாவட்ட உதவி ஆளுநா் எஸ்.பாலாஜி, தமிழ்நாடு என்சிசி ஈரோடு பட்டாலியன் அலுவலா் கே.ஹரிஸ் உள்ளிட்ட பலா் பேரணியில் கலந்து கொண்டனா்.