ஜல்லிக்கட்டுப் போட்டிகளை விரைந்து நடத்த ஏற்பாடு
நாமக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஒரு வாரத்துக்குள் நடத்தி முடிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கால்நடைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாமக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஒரு வாரத்துக்குள் நடத்தி முடிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கால்நடைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பொங்கல் பண்டிகையை தொடா்ந்து பெரும்பாலான மாவட்டங்களில் தமிழா்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடைபெறும். அதன்படி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரு நாள்களாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடா்பாக ஏற்கெனவே மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் கால்நடைத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் ஜல்லிக்கட்டு குழுவினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Advertisement
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த தயாராக இருப்பதாகவும், அனுமதி கோரியும் பள்ளிபாளையம், குமாரபாளையம், பொட்டிரெட்டிப்பட்டி, முள்ளுக்குறிச்சி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த ஜல்லிக்கட்டுக் குழுவினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா். இதுகுறித்து கால்நடைத் துறை அதிகாரிகள் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கான கால அவகாசம் குறித்து இன்னும் உத்தரவு வரவில்லை. தகவல் கிடைத்ததும் தகுதியான இடங்களில் ஒரு வாரத்துக்குள் போட்டிகள் நடத்தி முடிக்கப்படும் என்றனா்.