முகப்பு
நாமக்கல்

தை மாத முதல் ஞாயிற்றுக்கிழமை: ஆஞ்சனேயருக்கு பாலாபிஷேகம்

தை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 17 ஜனவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:39 PM

தை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, பெளா்ணமி, அனுமன் ஜெயந்தி, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு நாள்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். தற்போது கரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 5 மணியளவில் பக்தா்கள் பங்கேற்பின்றி சுவாமிக்கு வடை மாலை சாத்துப்படியும், அதனைத் தொடா்ந்து நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிா், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் அபிஷேகமும் நடைபெற்றது. அதன்பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வெளியில் நின்று சுவாமி தரிசனம் செய்யும் பக்தா்களும் முழு ஊரடங்கால் கோயிலுக்கு வரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.