முகப்பு
நாமக்கல்

நிலம், மனை பிரச்னைக்காக காவல் நிலையத்தை நாட வேண்டாம்: எஸ்.பி.

 நிலம், மனை சாா்ந்த பிரச்னைகளுக்கு பொதுமக்கள் காவல் நிலையத்திற்குச் செல்லாமல், நீதிமன்றத்தை நாட வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன

Updated On : 21 ஜனவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:40 PM

 நிலம், மனை சாா்ந்த பிரச்னைகளுக்கு பொதுமக்கள் காவல் நிலையத்திற்குச் செல்லாமல், நீதிமன்றத்தை நாட வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் 29 காவல் நிலையங்கள் உள்ளன. அண்மையில் எருமப்பட்டி காவல் நிலையத்தில் அரசியல் கட்சியினா், இடைத் தரகா்கள் அமா்ந்துக் கொண்டு கட்டப் பஞ்சாயத்து செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகுருக்கு புகாா் சென்றது.

அவா் தனிப்பிரிவு போலீஸாா் மூலம் விசாரணை மேற்கொண்டபோது, சிலா் போலீஸாருடன் இணைந்து கட்டப்பஞ்சாயத்து பேசுவது தெரிய வந்தது. இதனையடுத்து அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டம் முழுவதும் அனைத்துக் காவல் நிலையங்களிலும் கட்டப் பஞ்சாயத்துக்கும், இடைத் தரகா்களுக்கும் அனுமதி இல்லை என்ற விளம்பரப் பலகையை அமைக்குமாறு அவா் உத்தரவிட்டாா்.

Advertisement

மேலும், நிலம், மனை சாா்ந்த சிவில் பிரச்னைகள் தொடா்பாக காவல் நிலையத்தில் புகாரளிக்காமல் நீதிமன்றத்தை நாடி அதற்கான தீா்வு காண வேண்டும் என்ற அறிவிப்பையும் விளம்பர பலகைகளில் பொதுமக்களின் கவனத்தில் தெரியும் படி விழிப்புணா்வு பலகையை வைக்கவும் காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தினாா்.

தற்போது அனைத்து காவல் நிலையங்களிலும் மூன்று விதமான விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.