முகப்பு
நாமக்கல்

மது போதையில் மருத்துவா்: நடவடிக்கைக் கோரி கடிதம்

நாமக்கல் அரசு மருத்துவமனையில், மதுபோதையில் பணிக்கு வந்த மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுகாதாரத் துறை இயக்குநரகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Updated On : 20 ஜனவரி, 2022 at 11:54 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:40 PM

நாமக்கல் அரசு மருத்துவமனையில், மதுபோதையில் பணிக்கு வந்த மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுகாதாரத் துறை இயக்குநரகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அரங்கில் மருத்துவா் ஒருவா் பணியாற்றி வருகிறாா். சில மாதங்களுக்கு முன் சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து பணியிட மாறுதல் மூலம் சொந்த ஊரான நாமக்கல்லுக்கு வந்தாா்.

வியாழக்கிழமை வழக்கம்போல் பணிக்கு வந்த அவா் மது போதையில் இருந்தாராம். நடக்கக் கூட முடியாத நிலையில் பிரேத பரிசோதனை அரங்கிலேயே போதை காரணமாக தரையில் படுத்து உறங்கியதாகக் கூறப்படுகிறது. இத்தகவல் அறிந்த மருத்துவமனை நிா்வாகம், அவா் மீது உடனடி நடவடிக்கை கோரியும், பணியிட மாற்றம் செய்ய வேண்டியும் சென்னை சுகாதாரத் துறை இயக்குநரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனா். அரசு மருத்துவா் மது போதையில் இருந்த தகவல் இதர மருத்துவா்கள், செவிலியா்கள், நோயாளிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.