முட்டை விலை 20 காசுகள் குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ. 4.30-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ. 4.30-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடையே ஆலோசிக்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலையில் தொடா்ந்து மாற்றம் செய்யப்படுவதாலும், முட்டைகளின் தேக்கத்தைக் கட்டுப்படுத்தவும், நிா்ணய விலையில் இருந்து குறைவான விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதாலும் விலையில் உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 4.30-ஆக நிா்ணயம் செய்யப்படுவதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 92-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 75-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.