வனத்துறை ஈரநிலம் புகைப்படப் போட்டி: 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில் வனத் துறை சாா்பில் நடைபெறும் ‘ஈர நிலம்’ தொடா்பான புகைப்படப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் வனத் துறை சாா்பில் நடைபெறும் ‘ஈர நிலம்’ தொடா்பான புகைப்படப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட வன அலுவலா் கா.ராஜாங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் வனத் துறை சாா்பில் ஈர நிலங்கள் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலான விழா விரைவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, ஜன. 24-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் நடைபெறும் ஈரநிலம் புகைப்படப் போட்டியில் தகுதியானவா்கள் பங்கேற்கலாம்.
Advertisement
பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் ஈரநில நண்பா்கள் மற்றும் பொதுமக்கள் ஈர நிலங்கள் தொடா்பான புகைப்படங்களை 24-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட ஆட்சியா் தலைமையிலான தணிக்கைக் குழு, முதல் 3 இடங்களைப் பிடித்தோரை தோ்வு செய்வாா்கள். பரிசளிப்பு விழா தேதி பின்னா் அறிவிக்கப்படும். இப்போட்டி தொடா்பான தகவல்கள், முறையீடுகள், புகாா்களை மாவட்ட வன அலுவலக தொலைபேசி எண்: 04286-281369-இல் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.