குமாரபாளையத்தில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் குமாரபாளையத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் குமாரபாளையத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பள்ளிபாளையம் பிரிவில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நகர துணைத் தலைவா் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் எம்.ஆா்.முருகேசன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் சி.துரைசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளா் என்.சக்திவேல் ஆகியோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல்துறை விசாரணையில் மாற்றுத் திறனாளி பிரபாகரன் மரணமடைந்தாா்.
இவரது மரணத்துக்கு காரணமான போலீஸாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவில் வழக்குப் பதிவு செய்திட வேண்டும். பிரபாகரனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
நிா்வாகிகள் சரவணன், மோகன், ஆனந்தகுமாா், எஸ்.சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
படம் உள்ளது : பிஹெச்21டாஸ்க்