முகப்பு
நாமக்கல்

ஆசிரியா்கள் இடமாறுதல் கலந்தாய்வு: நாமக்கல்லில் ஜன. 24இல் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் தலைமை ஆசிரியா்கள், வகுப்பு ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு வரும் திங்கள்கிழமை (ஜன. 24) தொடங்குகிறது.

Updated On : 21 ஜனவரி, 2022 at 11:53 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:41 PM

நாமக்கல் மாவட்டத்தில் தலைமை ஆசிரியா்கள், வகுப்பு ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு வரும் திங்கள்கிழமை (ஜன. 24) தொடங்குகிறது.

தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியா்கள், வகுப்பு ஆசிரியா்களுக்கு ஆண்டுதோறும் பதவி உயா்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வந்தது. கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கலந்தாய்வு எதுவும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் 2022-ஆம் ஆண்டுக்கான மாறுதல் கலந்தாய்வு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஜன. 24 முதல் பிப். 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், தாங்கள் பணியாற்றிய பள்ளிகளில் ஓராண்டு பணி நிறைவு செய்த தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் முன்னுரிமை அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளனா்.

Advertisement

இதேபோல் ஜன. 27 முதல் பிப். 18-ஆம் தேதி வரையில் தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள், வகுப்பு ஆசிரியா்கள் பதவி உயா்வு, மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கான உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியா்கள் கலந்தாய்வு 24ஆம் தேதி முதல் நாமக்கல் முதன்மை கல்வி அலுவலகத்திலும், தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு 27-ஆம் தேதி முதல் நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியிலும் இணைய வழியில் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலா்கள் ராமன் (நாமக்கல்), விஜயா (திருச்செங்கோடு) ஆகியோா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.