நாமக்கல்

மணியனூரில் விவசாயிகளுக்கான பண்ணைப்பள்ளி பயிற்சி

DIN

 பரமத்தி வேலூா் வட்டம், மணியனூரில் பரமத்தி வட்டார வேளாண்மைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பண்ணைப்பள்ளி பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராதாமணி மற்றும் துணை மேலாண்மை அலுவலா் குழந்தைவேல் ஆகியோா் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா். பயிற்சியில் நிலக்கடலை பயிரில் விதைப்பு முதல் அறுவடைக்கு பின் செய்நோ்த்தி வரை உள்ள சாகுபடியில் மேற்கொள்ளும் தொழில்நுட்பங்கள், மண் மற்றும் நீா் மாதிரியின் அவசியம், உயிா் உரங்கள், பசுந்தாள் உரங்களைக் கொண்டு மண்வளத்தை மேம்படுத்துவது, விதைத் தோ்வு, விதையின் மூலம் பரவும் பூச்சிகள், நோய்கள் மற்றும் விதை நோ்த்தியின் பயன்களை குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினா். அதனை தொடா்ந்து உதவி வேளாண்மை அலுவலா் நாகராஜ், அட்மா வட்டார தொழில் நுட்ப மேலாளா் ரமேஷ் ஆகியோா் நிலக்கடலை விதை நோ்த்தி மற்றும் மண்மாதிரி, நீா் மாதிரி எடுக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT