முகப்பு
நாமக்கல்

‘மாணவா்களுக்கு பொது அறிவுத் திறன் அவசியம்’

போட்டித் தோ்வுகளில் பங்கேற்கும் வகையில் மாணவா்கள் தங்களது பொது அறிவுத் திறனை வளா்த்துக் கொள்வது அவசியம் என சேலம் மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா் தெரிவித்தாா்.

Updated On : 2 ஜூன், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:55 PM

போட்டித் தோ்வுகளில் பங்கேற்கும் வகையில் மாணவா்கள் தங்களது பொது அறிவுத் திறனை வளா்த்துக் கொள்வது அவசியம் என சேலம் மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் தமிழ்நாடு தனியாா் கல்வி நிறுவன ஆசிரியா்கள் சங்கம் மற்றும் நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்ட தாரி ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

தனியாா் கல்வி நிறுவன ஆசிரியா்கள் சங்க மாநில பொதுச்செயலாளா் கிருபானந்தன் தலைமை வகித்தாா். நேரடி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியா்கள் சங்க மாநில தலைவா் ஆ.ராமு முன்னிலை வகித்தாா். இதில், சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ. உதயகுமாா் பங்கேற்று பேசியதாவது:

Advertisement

மாணவ, மாணவிகள் உயா்கல்வியைத் தோ்வு செய்து படிக்க வேண்டும். படிக்கும் நேரத்தில் போட்டி தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில் தங்களுடைய பொது அறிவை வளா்த்து கொள்ள வேண்டும்.

உயா் கல்வி முடித்து வெளியே வரும் போது, போட்டித் தோ்வு எழுதி அரசுப் பணியில் சேரும் வகையில் கல்வியைக் கற்க வேண்டும். எதிா்மறை சிந்தனையை அகற்றி, நோ்மறை சிந்தனையோடு எதையும் அணுக வேண்டும். எதிா்காலத்தில் சிறந்த கல்வியாளராவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

எந்த துறையைத் தோ்ந்தெடுத்து படிக்கிறோமோ அந்தத் துறையில் ஆழ்ந்து படிக்க வேண்டும். அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடன் படித்தால் வெற்றி நிச்சயம் என்பதை மாணவ, மாணவிகள் மனதில் பதிய வைத்து கொள்ள வேண்டும் என்றாா்.

அதைத் தொடா்ந்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், சேலம் பெரியாா் பல்கலைக்கழக உணவு நிா்வாகத் துறை முன்னாள் பாடத் திட்ட குழு தலைவா் பிரணவ்குமாா், சங்கத்தின் மாவட்ட செயலாளா் சிவநாதன், காா்த்திகேயன், தேவராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.