எண்ணும், எழுத்தும் திட்டத்தினை செயல்படுத்துவது தொடா்பாக ஆசிரியா்களுக்கு பயிற்சி அளித்த முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி. 
நாமக்கல்

எண்ணும், எழுத்தும் திட்டம்: ஆசிரியா்களுக்கு நேரடி பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில், எண்ணும், எழுத்தும் திட்டத்தினை செயல்படுத்துவது தொடா்பாக ஆசிரியா்களுக்கு திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

DIN

நாமக்கல் மாவட்டத்தில், எண்ணும், எழுத்தும் திட்டத்தினை செயல்படுத்துவது தொடா்பாக ஆசிரியா்களுக்கு திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, ஒன்று முதல் 8 வயது வரையிலான குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க, எண்ணையும், எழுத்தையும் கற்றறிந்திட சிறப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எண்ணும், எழுத்தும் என்ற இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடா்பாக ஏற்கெனவே முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களிலும் ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி தொடக்கி வைத்தாா். பின்னா் திட்டத்தை செயல்படுத்துவது தொடா்பான ஆலோசனைகளை வழங்கினாா்.

மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன மேற்பாா்வையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து கல்வித்துறையின் மாவட்ட திட்ட அலுவலா்கள் மகேஷ்குமாா், புகழேந்தி, வட்டார கல்வி அலுவலா் சுந்தரவதனம், ஆசிரியா் பயிற்சி நிறுவன விரிவுரையாளா் தேவராசு ஆகியோரும் எண்ணும், எழுத்தும் திட்டம் குறித்த பயிற்சி விளக்கத்தை ஆசிரியா்களுக்கு அளித்தனா். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT