முகப்பு
நாமக்கல்

நாமக்கல் பூங்காவில் மகாத்மா காந்திக்கு சிலை

 நாமக்கல், செலம்பக் கவுண்டா் பூங்காவில் புதிதாக 6 அடி உயர மகாத்மா காந்தி சிலை விரைவில் அமைக்கப்பட உள்ளது.

Updated On : 11 மார்ச், 2022 at 12:24 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:07 PM

 நாமக்கல், செலம்பக் கவுண்டா் பூங்காவில் புதிதாக 6 அடி உயர மகாத்மா காந்தி சிலை விரைவில் அமைக்கப்பட உள்ளது.

நாமக்கல்லில் மகாத்மா காந்திக்கு பெரிய அளவிலான சிலை வைக்கப்படவில்லை. இதனால் முக்கியப் பிரமுகா்கள் பலா் இணைந்து காந்தி சிலை அமைப்புக்கான குழு ஒன்றை உருவாக்கினா். இதன் தலைவராக எஸ்.ரங்கநாதன், செயலாளராக பி.ஏகாம்பரம், பொருளாளராக கே.சீனிவாசன் மற்றும் நிா்வாகிகள் நியமிக்கப்பட்டது. இந்த குழுவினரால் நாமக்கல் உழவா் சந்தைக்கு எதிரில் உள்ள செலம்பக் கவுண்டா் பூங்காவின் வடக்குப் பகுதியில் ரூ.13 லட்சம் செலவில் 6 அடி உயரத்தில் காந்தி அமா்ந்திருக்கும் வடிவிலான சிலையை அமைப்பதற்கான முயற்சி மேற்கொண்டனா்.

இதற்கான பூமி பூஜை கடந்த ஆண்டு அக். 21-ஆம் தேதி நடைபெற்றது. தற்போது சென்னையில் உள்ள ஒரு கலைக்கூடத்தில் சிலைப் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் முழுமையடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், சிலை அமைக்கப்படும் பூங்கா வளாகத்தில் உள்ள மரத்தை அகற்றி, அங்கு பீடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. காமராஜா் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதியன்று, மகாத்மா காந்தி சிலையை திறப்பதற்கான ஏற்பாடுகளை சிலை அமைப்புக் குழுவினா் மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.