நாமக்கல்

திருச்செங்கோட்டில் அரசுப் பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை

திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி இரண்டாவது மாடியில் இருந்து குதித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

DIN

திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி இரண்டாவது மாடியில் இருந்து குதித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீதாராம்பாளையத்தைச் சேர்ந்தவர் சங்கர்(45). தச்சு தொழிலாளி. இவரது மனைவி சந்தனமாரி(35). இவர்களுக்கு அர்ஜுன்(15), அர்ச்சனா(14) என்ற மகன் மகள் உள்ளனர். இதில், அர்ச்சனா திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் வகுப்பறையில் இருந்த அவர் வாந்தி வருவதாக கூறி வெளியே சென்று இரண்டாவது மாடியில் இருந்து குதித்தார். தரைத்தளத்தில் மாற்றுத் திறனாளிகள் செல்வதற்காக அமைக்கப்பட்ட சாய்வுதளத்தில் உள்ள கம்பி மீது விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார்.

சத்தம் கேட்டு ஓடி வந்த ஆசிரியர்கள் மாணவியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். மாணவியின் பெற்றோர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். 

மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மாடியில் இருந்து தவறி விழுந்தாரா என்பது குறித்து திருச்செங்கோடு நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணிடம் நகைப் பறிப்பு

சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு செவிலியா்கள் மேலாண்மைக்கான சா்வதேச விருது!

கவர்ச்சிகர அறிவிப்புகளை ஒதுக்கிவிட்டு வாக்களிக்க குடியரசுத் தலைவர் அறிவுறுத்தியது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தொடா் விபத்து: 4 போ் காயம்

தங்கம் விலை ஏன் உயர்கிறது?

SCROLL FOR NEXT