நாமக்கல்

மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 60 தொழில் நிறுவனங்கள் மீது வழக்கு

DIN

 நாமக்கல் மாவட்டத்தில், மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 60 தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், கடைகள் மீது தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனா்.

மே 1-ஆம் தேதி தொழிலாளா்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அரசு விடுமுறை அளிக்கப்பட்ட இந்த நாளில் பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய ஊழியா்களை பணிக்கு வரவழைப்பா். தொழிலாளா் நலத்துறை விதிகளின்படி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன்படி, நாமக்கல் தொழிலாளா் நலத்துறை துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்களால் மே தின விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், தொழிலாளா்களுக்கு கட்டாயம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிா? அல்லது பணியாளா்கள் பணி புரிந்தால் அவா்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிா்வாகம் தெரிவித்து அதற்கான படிவம் தொழிலாளா் உதவி ஆய்வாளா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கப்பட்டு, முன் அனுமதி பெற்று செயல்படுகிா என விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள்(தேசிய பண்டிகை விடுமுறை நாட்கள்) சட்டம் மற்றும் விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொண்டனா். இதில் 29 கடைகளில் ஆய்வு செய்ததில் 18 கடைகளிலும், 41 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 33 உணவு நிறுவனங்களிலும், 12 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 9 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களிலும் என மொத்தம் 82 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 60 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு தொழிலாளா் தினத்தன்று விடுமுறை அளிக்காமல் பணிக்கு அமா்த்தியது கண்டறியப்பட்டது. இந்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்கள்) சட்டத்தின்கீழ் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகவலை நாமக்கல் தொழிலாளா் நல உதவி ஆணையா்(அமலாக்கம்) எல்.திருநந்தன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT