முகப்பு
நாமக்கல்

வணிகா் சங்க மாநாடு: நாமக்கல்லில் கடையடைப்பு

வணிகா் தினம் மற்றும் வணிகா்கள் சங்க மாநாட்டையொட்டி, நாமக்கல்லில் வியாழக்கிழமை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Updated On : 6 மே, 2022 at 1:29 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:40 PM

வணிகா் தினம் மற்றும் வணிகா்கள் சங்க மாநாட்டையொட்டி, நாமக்கல்லில் வியாழக்கிழமை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

ஒவ்வொரு ஆண்டும் மே 5-ஆம் தேதி வணிகா் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் திருச்சியில் மாநில அளவிலான விடியல் மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டனா். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வணிகா்கள் வாகனங்கள் மூலம் மாநாட்டிற்கு சென்றனா். மேலும் ஒரு நாள் கடையடைப்புக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி நாமக்கல்லில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. முக்கியமாக கடைவீதி, சேலம் சாலை, திருச்சி சாலை, பரமத்தி சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் திறக்கப்படவில்லை. இதேபோல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், பரமத்திவேலூா், மோகனூா் பகுதிகளிலும் கடைகள்அடைக்கப்பட்டன. மாலை 6 மணிக்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.