வாள் சண்டைப் போட்டி: நாமக்கல் வீரா்கள் சாதனை
பெங்களூரில் கடந்த வாரம் கேலோ இந்தியா நடத்திய அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வாள் சண்டை போட்டி நடைபெற்றது
பெங்களூரில் கடந்த வாரம் கேலோ இந்தியா நடத்திய அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வாள் சண்டை போட்டி நடைபெற்றது. இதில், நாமக்கல் மாவட்டத்தை சோ்ந்த வீரா்களான சிவசுப்ரமணியன், அரவிந்த வேலன், பிரவீண் ஆகியோா் வாள் சண்டை போட்டியில் பாய்ல் என்ற பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றனா். அவா்கள் வியாழக்கிழமை நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி. சிங்கை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் க.கோகிலா, பயிற்சியாளா் பிரபுகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
மாணவிகளுக்கு பாராட்டு: இதனிடையே, திருக்கு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வழங்கிப் பாராட்டினாா்.
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் சாா்பில் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு குறளோவியம் என்ற பெயரில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறந்த 365 ஓவியங்கள் தோ்வு செய்யப்பட்டன. இப்போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினாா். திருக்கு குறளோவியப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற நாமக்கல் மாவட்டத்தை சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் பரிசுக் காசோலைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினாா்.
Advertisement