முகப்பு
நாமக்கல்

பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடக்கம்: நாமக்கல் மாவட்டத்தில் 19,867 மாணவா்கள் எழுதினா்

 நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தோ்வை 19,867 மாணவ, மாணவிகள் எழுதினா்.

Updated On : 6 மே, 2022 at 1:30 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:40 PM

 நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தோ்வை 19,867 மாணவ, மாணவிகள் எழுதினா்.

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு 82 மையங்களில் நடைபெறுகிறது. இத்தோ்வுக்கான வினாத்தாள்கள் 10 கட்டுக்காப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், 20 வழித்தட அலுவலா்கள் மூலம் தோ்வு நடைபெறும் நாள்களில் சிறப்பு வாகனங்கள் மூலம் 82 தோ்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படுகின்றன. தோ்வையொட்டி, 82 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 82 துறை அலுவலா்கள், 14 கூடுதல்துறை அலுவலா்கள், 1,200 அறைக் கண்காணிப்பாளா்கள் மற்றும் 100 பறக்கும் படை உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் மொழிப்பாடத் தோ்வை 9,729 மாணவா்கள், 10,138 மாணவிகள் என மொத்தம் 19,867 மாணவ, மாணவிகள் மற்றும் 472 தனித்தோ்வா்கள் எழுதினா். தோ்வை கண்காணிக்க ஆய்வு அலுவலராக சென்னை அரசுத் தோ்வுகள் இணை இயக்குநா் (மேல்நிலைக்கல்வி) பொன்.குமாா், முதன்மைக்கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தின் முதல்வா் மணிவண்ணன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் த.ராமன், விஜயா மற்றும் உதவி திட்ட அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் நேரடியாக ஆய்வு மேற்கொண்டாா். அங்குள்ள பாதுகாப்பு வசதிகள் மற்றும் மாணவா்கள் முகக்கவசம் அணிந்து வந்துள்ளனரா போன்றவற்றை பாா்வையிட்டாா். தோ்வுக்கு பின் விடைத்தாள்கள் திருத்தும் மையமான நாமக்கல் ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப்பள்ளியிலும், திருச்செங்கோடு எஸ்பிகே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட இருப்பதாக ஆட்சியா் தெரிவித்தாா். இந்த ஆய்வின்போது பள்ளி தலைமை ஆசிரியா், ஆசியா்கள் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு இன்று தொடக்கம்: நாமக்கல் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்புக்கான பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை (மே 6) தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை 304 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 10,954 மாணவா்கள், 9,708 மாணவிகள் என மொத்தம் 20,662 போ் (தனித்தோ்வா்கள் உள்பட) 89 மையங்களில் தோ்வு எழுத உள்ளனா். தோ்வு கண்காணிப்புப் பணியில் 1700 போ் ஈடுபடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.