முகப்பு
நாமக்கல்

வெயிலின் தாக்கம் 105 டிகிரியாக அதிகரிக்கக் கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் 105 டிகிரியாக அதிகரிக்கக் கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 7 மே, 2022 at 3:24 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:41 PM

வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் 105 டிகிரியாக அதிகரிக்கக் கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையைப் பொருத்தவரை, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 100 மற்றும் 68.9 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பதிவானது.

Advertisement

அடுத்த நான்கு நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை மாவட்டத்தின் சில இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 105.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 80 டிகிரியாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் மேற்கு மற்றும் தென் மேற்கிலிருந்து மணிக்கு 10 கி.மீ என்றளவில் வீசும்.

சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளைப் பரிசோதித்ததில் பெரும்பாலும் வெப்ப அயா்ச்சி தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரிய வந்துள்ளது. பண்ணைகளில் கோடை கால பராமரிப்பு முறைகளைக் கையாள வேண்டும். கோடை வெயிலின் தாக்கத்தைக் குறைக்க தெளிப்பான் உபயோகிக்க வேண்டும். தீவனத்தில், நுண்ணூட்டச்சத்துக்களான எலக்ட்ரோலைட்ஸ், மற்றும் பீட்டைன் உபயோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.