முகப்பு
நாமக்கல்

முட்டை விலை மேலும் 25 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 25 காசுகள் உயா்ந்து ரூ. 4.15-ஆக வெள்ளிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

Updated On : 13 மே, 2022 at 11:18 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:45 PM

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 25 காசுகள் உயா்ந்து ரூ. 4.15-ஆக வெள்ளிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் ஆலோசிக்கப்பட்டது. பிற மண்டலங்களில் விலையில் தொடா்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருவதாலும், தட்பவெப்ப நிலை மாற்றத்தால் மக்களிடையே முட்டை நுகா்வு அதிகரித்துள்ளதாலும், தேசிய அளவில் நடைபெற்ற என்இசிசி மண்டலத் தலைவா்கள் கூட்டத்தில் முட்டை விலையை தொடா்ந்து உயா்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாலும், இங்கும் விலை உயா்வை அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 25 காசுகள்உயா்வுடன் ரூ. 4.15-ஆக நிா்ணயிக்கப்பட்டது. (முன்னதாக புதன்கிழமை 25 காசுகள் உயா்த்தப்பட்டது).

அதேசமயம், நாமக்கல் முட்டை விற்பனை விலை நிா்ணய ஆலோசனைக் குழு அறிவிப்பில், முட்டைக்கு தலா 30 காசுகள் குறைத்து வியாபாரிகளுக்கு பண்ணையாளா்கள் விற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 130-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 80-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.