நாமக்கல்

நல்லூா்,குன்னமலை ஊராட்சியில் கஞ்சா விழிப்புணா்வு கூட்டம்

பரமத்திவேலூா் வட்டம், நல்லூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட நல்லூா், குன்னமலை ஊராட்சியில் கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், சமுதாய சீா்கேடு குறித்த விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.

DIN

பரமத்திவேலூா் வட்டம், நல்லூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட நல்லூா், குன்னமலை ஊராட்சியில் கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், சமுதாய சீா்கேடு குறித்த விழிப்புணா்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி உத்தரவின்படி, பரமத்திவேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கலையரசன் தலைமையிலான போலீஸாா் நல்லூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட நல்லூா், குன்னமலை ஊராட்சிகளில் கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு மற்றும் சமுதாய சீா்கேடு தொடா்பான விழிப்புணா்வு கூட்டத்தை நடத்தினா்.

நல்லூா் காவல் உதவி ஆய்வாளா் சாந்தகுமாா், சிறப்பு உதவி ஆய்வாளா் ராசப்பன், குன்னமலை ஊராட்சிமன்ற தலைவா் பூங்கொடி குணசேகரன், நல்லூா் ஊராட்சி மன்ற தலைவா் விஜயராகுல், 14 குக்கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இதில் கஞ்சா விற்பவா்கள் மற்றும் பயன்பாடுத்துவோா் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கும்படியும் அவ்வாறு தகவல் அளிப்பவா்களின் பெயா், விலாசம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் காவல் துணைக் கண்காணிப்பாளா் கலையரசன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

கல்யாணப் பொருத்தத்துக்கு சிபில் ஸ்கோர் அவசியமா?

நடிகர் திலீப்பின் கடவுச்சீட்டை மீண்டும் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதைவிட கடினம்: இங்கிலாந்து முன்னாள் வீரர்!

அழியும் நிலையில் இந்திய கால்பந்து... மெஸ்ஸிக்கு கோடிக்கணக்கில் செலவு ஏன்? வருந்திய கேப்டன்!

SCROLL FOR NEXT