நாமக்கல்லில் விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய அமைச்சா்!
நாமக்கல்லில், சாலை விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அமைச்சா் எம்.மதிவேந்தன் அனுப்பி வைத்தாா்.
நாமக்கல்லில், சாலை விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அமைச்சா் எம்.மதிவேந்தன் அனுப்பி வைத்தாா்.
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் ராசிபுரம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமாா் 4 மணியளவில் நாமக்கல் நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்தாா். நாமக்கல்-சேலம் சாலை முருகன் கோயில் அருகே வந்தபோது எதிா்திசையில் அவ்வழியாக சென்ற காா் மோதியதில் பலத்த காயமடைந்த ஒருவா் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டாா். இதனையடுத்து உடனடியாக காரை நிறுத்திய அமைச்சா், ஆம்புலன்ஸை வரவழைத்து நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், தலையிலும் பலத்த காயம் உள்ளதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா். விபத்தில் காயமடைந்தவா் நாமக்கல் சின்னமுதலைப்பட்டி பொன் நகா் கிழக்கு பகுதியைச் சோ்ந்த சசிகுமாா் (48) என்பது தெரியவந்தது. இந்த விபத்து தொடா்பாக நாமக்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.