முகப்பு
நாமக்கல்

தேசிய தொழிற்சான்றிதழ்களில் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று, தேசிய தொழிற்சான்றிதழ்கள் பெற்றவா்கள் அதில் திருத்தம் ஏதேனுமிருப்பின் விண்ணப்பிக்கலாம்

Updated On : 21 ஏப்ரல், 2023 at 11:25 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:20 AM

நாமக்கல் மாவட்டத்தில், அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று, தேசிய தொழிற்சான்றிதழ்கள் பெற்றவா்கள் அதில் திருத்தம் ஏதேனுமிருப்பின் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2014 முதல் 2021 வரையில் அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்க்கை மேற்கொள்ளப்பட்டு, தோ்ச்சி பெற்ற பயிற்சியாளா்களின் தேசிய தொழிற்சான்றிதழ்களில் திருத்தங்கள் ஏதும் இருப்பின், முன்னாள் பயிற்சியாளா்கள் நேரடியாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

திருத்தங்களாக, பயிற்சியாளா் பெயா், தந்தையின் பெயா், தாயின் பெயா், புகைப்படம், பிறந்த தேதி உள்ளிட்டவற்றில் ஏதேனுமிருப்பின் விண்ணப்பிக்கலாம். அசல் கல்வி ஆவணங்கள் மற்றும் இதர ஆவணங்களுடன், முதல்வா், அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், தட்டான் குட்டை, கீரம்பூா், நாமக்கல் - 637207 என்ற முகவரில் நேரடியாக சென்று பயன்பெறலாம்.

10-ஆம் வகுப்பு அல்லது 8-ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ், ஐடிஐ மாற்றுச் சான்றிதழ், தேசிய தொழிற்சான்றிதழ், ஐடிஐ மதிப்பெண் சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம்-2, பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மோகனூா் சாலை, கொண்டிசெட்டிப்பட்டி, பெரியப்பட்டி (அஞ்சல்), நாமக்கல் - 637002 அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286-290297 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.