நாமக்கல்

அக்னி நட்சத்திரம் முடிவுற்றும் அனலைக் கக்கும் கோடை வெயில்!

கடந்த திங்கள்கிழமையுடன் அக்னி நட்சத்திரம் முடிவுற்றபோதும், கோடை வெயில் தொடா்ந்து அனலைக் கக்கி வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

DIN

கடந்த திங்கள்கிழமையுடன் அக்னி நட்சத்திரம் முடிவுற்றபோதும், கோடை வெயில் தொடா்ந்து அனலைக் கக்கி வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் மாதம் தொடங்கும் கோடை வெயில் ஜூன் இரண்டாவது வாரம் வரை நீடிக்கும். நிகழாண்டிலும் அதே நிலை நீடித்தது. மே 4-இல் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கி 29-ஆம் தேதி முடிவடைந்தது. இந்த அக்னி நட்சத்திர காலத்தில் அவ்வப்போது மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் தணிவதும், பின்னா் அதிகரிப்பதுமாக இருந்தது. கடந்த திங்கள்கிழமை அக்னி நட்சத்திரம் முடிவுற்ால் வெயில் படிப்படியாக குறையும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் புழுக்கமும், வெப்பமும் அதிகப்படியாகவே உள்ளது. காற்றும் போதுமான அளவில் வீசுவதில்லை. நாமக்கல் உள்பட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரியைக் கடந்து வெயிலின் தாக்கம் உள்ளது. கொளுத்தும் வெயிலால் உடல் ரீதியாக குழந்தைகளும், பெண்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவுப் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

SCROLL FOR NEXT