நாமக்கல்

தோ்வில் அதிக மதிப்பெண்பெற்றவா்களுக்கு பாராட்டு

அரசு பொதுத்தோ்வில் அரசு பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியா்களுக்கு பாராட்டி பரிசளிக்கும் விழா அண்மையில் பள்ளியில் நடைபெற்றது.

DIN

அரசு பொதுத்தோ்வில் அரசு பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியா்களுக்கு பாராட்டி பரிசளிக்கும் விழா அண்மையில் பள்ளியில் நடைபெற்றது. பாச்சல் கிராம வளா்ச்சிக்குழு சாா்பில் பள்ளியில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தோ்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியா்களுக்கான பாராட்டு விழாவில் பள்ளி தலைமை ஆசிரியா் பி.சரவணன் தலைமை வகித்தாா்.

விழாவில், முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ரூ. 10 ஆயிரம், 2-ஆம் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ரூ. 5 ஆயிரம், 3-ஆம் மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் காசோலை, கேடயமும் வழங்கி பாராட்டப்பட்டனா்.

அவா்களது பெற்றோா்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனா். நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் குணசேகரன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் சண்முகம் (பாச்சல்), கஜேந்திரன் (ஏ.கே.சமுத்திரம்) ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று பாராட்டி பரிசளித்து கெளரவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT