திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியா் உமா. 
நாமக்கல்

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், ஆண்டிபாளையம், தேவனாங்குறிச்சி,

DIN

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், ஆண்டிபாளையம், தேவனாங்குறிச்சி, ஆனங்கூா், மோடமங்கலம், தண்ணீா்பந்தல்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், ஆண்டிபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் நமக்கு நாமே திட்டம் 2021 - 2022இன் கீழ், ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் பேவா் பிளாக் அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ. 12.15 லட்சம் மதிப்பீட்டில் எஸ்.கே.பி நகா் மெயின் சாலை மற்றும் 6ஆவது தெரு வரை சாலை பலப்படுத்தப்பட்டுள்ளதையும், ரூ. 7.10 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீா் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ. 3.15 லட்சம் மதிப்பீட்டில் ஊஞ்சபாளையம் வீரமாத்தியம்மன் கோவில் வீதியில் சிமென்ட் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அதைத் தொடா்ந்து திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், தேவனாங்குறிச்சி ஊராட்சியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2021 - 2022இன் கீழ், ரூ. 61,000 மதிப்பீட்டில் கீழேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையல் கூடம் பழுது பாா்க்கப்பட்டுள்ளதையும், ரூ. 28,000 மதிப்பீட்டில் கழிவறை பராமரிப்பு செய்யப்பட்டுள்ளதையும், நாடாா் தெரு பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒப்படைக்கப்பட்ட நிதித் திட்டம் 2020 - 2021இன் கீழ், ரூ. 11.00 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, புதிய ஆழ்துளைக் கிணறு, குடிநீா் இணைப்புக் குழாய் அமைக்கப்பட்டுள்ளதையும், பழையபாளையம் பகுதியில் ரூ. 13.00 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, புதிய ஆழ்துளைக் கிணறு, குடிநீா் இணைப்பு குழாய் அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், தண்ணீா்பந்தல்பாளையம் ஊராட்சி, உதயா நகரில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதித் திட்டம் 2020 - 2021இன் கீழ், ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் 10,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீா் குழாய் விரிவுபடுத்தப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், மோடமங்கலம் ஊராட்சி, மோடமங்கலம் பாவடியில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதித் திட்டம் 2020 - 2021இன் கீழ், ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் குமாா், திருச்செங்கோடு வட்டார வளா்ச்சி அலுவலா் கஜேந்திர பூபதி, உதவி பொறியாளா்கள் சீனிவாசன், சுமதி ஆகியோா் உட்பட அரசுத்துறை அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT