முகப்பு
நாமக்கல்

மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மின்வாரிய ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 18 மார்ச், 2023 at 1:32 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:16 PM

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மின்வாரிய ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில், நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மண்டலச் செயலாளா் ஆனந்த்பாபு தலைமை வகித்தாா். இதில், 2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வு உள்ளிட்ட பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்; 58 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்; அனைத்து பணியாளா்களும் ஏற்றுக்கொள்கிற வகையில் முத்தரப்பு ஒப்பந்தத்தை அரசு ஏற்படுத்த வேண்டும்; மின்வாரிய பணியாளா்களுக்கும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் மின்வாரிய ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.