ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை கொட்டகை குடியிருப்புக்கு மீண்டும் தீ வைப்பு: 4 தொழிலாளர்கள் படுகாயம்
ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை கொட்டகை குடியிருப்புக்கு மீண்டும் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை கொட்டகை குடியிருப்புக்கு மீண்டும் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஜேடர்பாளையம் நேற்று முன்தினம் இரவு வடகரை ஆத்தூரில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான ஒரு வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் வாகனம் முழுவதும் எரிந்து சேதமானது. அதேபோல் ஜேடர்பாளையத்தில் உள்ள குளத்தில் நேற்று முன்தினம் மாலை திடீரென மீன்கள் செத்து மிதந்தன. இதனால் குளத்தில் விஷம் கலக்கப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான ஆலை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலை கொட்டகையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசை முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் தூங்கி கொண்டிருந்த நான்கு தொழிலாளர்களில் இரண்டு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இரண்டு தொழிலாளர்கள் லேசான காயங்களோடும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கரப்பாளையத்தில் கடந்த மார்ச் 11ஆம் தேதி பட்டதாரி பெண் நித்தியா ஆடு மேய்க்க சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்து கொடுரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் போலீசார் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை எனக் கூறி ஒரு சமூகத்தினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இது இரு சமூகத்தினரிடையே மோதலாக வெடித்துள்ளது. இரு சமூகத்தினர் இடையே தொடர்ச்சியாக வெல்லம் தயாரிக்கும் ஆலக்ககொட்டகை மற்றும் ஆலை கொட்டகையில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் தங்கி இருக்கும் குடியிருப்பு குடில்கள், டிராக்டர்களுக்கு தீ வைப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது. அதற்கு மாறாக மற்றொரு சமூகத்தினர் சார்ந்த ஆலைக் கொட்டகை மற்றும் அவர்களைச் சார்ந்த பல்வேறு இடங்களில் தீ வைப்பது பெட்ரோல் குண்டு வீசுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
தற்போது பள்ளி வாகனம் தீப்பிடித்து எரிந்ததும் குளத்தில் மீன்கள் இறந்து கிடந்ததும் இவர்களால் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் ஜேடர்பாளையம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.