கோப்புப் படம். 
நாமக்கல்

பரமத்திவேலூரில் வயதான தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை

பரமத்திவேலூரில் வயதான தம்பதியினர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

DIN

பரமத்திவேலூரில் வயதான தம்பதியினர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

பரமத்திவேலூர் வட்டம், வேலூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் பரமசிவம் (72). இவரது மனைவி பஞ்சவர்ணம் (62). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகள் கரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி ஏற்கெனவே இறந்து விட்டார். இரு மகன்களுக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால் பரமசிவம் மற்றும் அவரது மனைவி பஞ்சவர்ணம் ஆகிய இருவரும் தனியாக வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். 

இந்நிலையில் இருவருக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர். பஞ்சவர்ணத்திற்கு சர்க்கரை நோய் இருந்ததால் அவரது இரு விரல்கள் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரண்டு விரல்களையும் அகற்றப்பட்டது. இதனால் வலியில் இருந்து வந்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இருவரும் உடல் நிலை சரியாகாததால் மனமுடைந்த இருவரும் வீட்டின் விட்டதில் சேலையால் தனித்தனியாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். 

அருகில் இருந்தவர்கள் நீண்ட நேரமாகியும் இருவம் வீட்டை விட்டு வெளியே வராததால் வீட்டினுள் சென்று பார்த்துள்ளனர். வயதான தம்பதியினர் இருவரும் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து வேலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து தம்பதியினர் இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வயதான தம்பதியினர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது அப் பகுதியில் பரபரப்பையும்,சேகத்தையும் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை!

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT