பரமத்தி வேலூரில் உள்ள பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.
இவ்விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை ஹேரம்ப மகா கணபதிக்கு யாக பூஜையும், சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும், மாலை 108 விக்னேஸ்வர பூஜையும் நடைபெற்றன. சனிக்கிழமை காலை மகா கணபதி யாகமும், அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரமும், மாலை லட்சாா்ச்சனை மற்றும் தவில் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை காலையில் மகா கணபதி யாகம், 108 வலம்புரி சங்கு மற்றும் 1008 சங்காபிஷேகம், பிற்பகல் 12 மணிக்கு மேல் மகா ஆராதனை, மாலை விசேஷ பூஜை, பிரசாதம் வழங்குதல், சிறப்பு அலங்கார ஆராதனை ஆகியவை நடைபெற உள்ளன.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு திங்கள்கிழமை காலை ஹேரம்ப மகா கணபதி யாகம், பால்குட அபிஷேகம், திருமஞ்சனம், சிறப்பு அலங்கார ஆராதனை, பிற்பகல் மற்றும் இரவு விசேஷ பூஜை, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை பரமத்தி வேலூா் பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.