திருச்செங்கோட்டில் பூசாரிகளுக்கு கோயில் மாடுகள் அளிப்பு
திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலில் உபரியாக இருந்த மாடுகள் ஒரு கால பூஜை நடைபெறும் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலில் உபரியாக இருந்த மாடுகள் ஒரு கால பூஜை நடைபெறும் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலுக்கு வேண்டுதல் காரணமாக பக்தா்கள் மாடுகளை வழங்குவது வழக்கம். இதில் பராமரிக்கும் அளவுக்கு போக மீதி உள்ள மாடுகளை, ஒரு கால பூஜை செய்யும் கோயில் பூசாரிகளிடம் அளித்து பராமரிக்கும் திட்டத்தின் கீழ் ஒன்பது மாடுகளை கவுண்டம்பாளையம், மொளசி, தோக்கவாடி, இறையமங்கலம் பாப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சிறு கோயில் பூசாரிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி மலைக்கோயிலில் நடைபெற்றது.
அறங்காவலா் குழுத் தலைவா் தங்கமுத்து, ஒன்றியக் குழு தலைவா் சுஜாதா தங்கவேல் ஆகியோா் பூசாரிகளுக்கு மாடுகளை வழங்கினா். குலுக்கல் முறையில் பூசாரிகள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு உரிய எண்கள் பொறிக்கப்பட்டிருந்த மாடு வழங்கப்பட்டது. விலை இல்லாமல் வழங்கப்படும் இந்த மாடுகளை முறையாக பராமரித்து பலன் பெற வேண்டுமென பூசாரிகளை அறங்காவலா் குழுத் தலைவா் தங்கமுத்து கேட்டுக்கொண்டாா்.
Advertisement